搜索
热搜: music
门户 Culture Language view content

அரபு மொழி

2015-6-28 00:08| view publisher: amanda| views: 4357| wiki(57883.com) 0 : 0

description: அரபு மொழி ஆப்பிரிக்க ஆசிய மொழிக் குடும்பத்தின் செமிட்டிக் கிளையின் மிகப் பெரிய மொழி.அறமைக் மொழி, ஹீப்ரு மொழ ...
அரபு மொழி ஆப்பிரிக்க ஆசிய மொழிக் குடும்பத்தின் செமிட்டிக் கிளையின் மிகப் பெரிய மொழி.அறமைக் மொழி, ஹீப்ரு மொழி என்பவற்றுடன் தொடர்புபட்டது. இன்று 21 நாடுகளின் அரபு ஆட்சி மொழியாகும். ஐ.நா-வின் அதிகாரப்பூர்வ மொழிகளுள் ஒன்றாகவும் விளங்குகிறது. 183 மில்லியன் மக்களின் தாய்மொழியாக அரபு மொழி இருக்கிறது.[6] இஸ்லாமிய சமயத்துடன் தொடர்புபட்டதாகையால் உலகெங்குமுள்ள முஸ்லிம்களால் கற்கப்படுகிறது. வலமிருந்து இடமாக எழுதப்படுகிறது. அல்ஜீரியா, பாரேன், எகிப்து, எரித்திரியா, ஈராக், ஜோர்தான், குவைத், லெபனான், லிபியா, ஓமான், கட்டார், சவுதி அரேபியா, சூடான், சிரியா, யேமன் போன்ற நாடுகளில் பேசப்படுவதோடு அரசு ஏற்புடைய மொழியாகவும் உள்ளது. அரபு நாட்டில் வாழும் அந்நிய இனத்தினர் பலர் அரபு மொழியைத் தாய்மொழியாகவும் பேசும் மொழியாகவும் கொண்டிருக்கின்றனர்.

அரபு மொழி பல மொழிகளுக்குத் தன் சொற்களைக் கொடை அளித்துள்ளது. அவற்றில் பாரசீக மொழி, துருக்கியம், சோமாலி, போசுனியன், வங்காளி, உருது, இந்தி, மலாய், அவுசா போன்றவை அடங்கும். அதே சமயம் அரபு மொழிக்கும் மற்ற மொழிகள் சொற்கொடை வழங்கியுள்ளன. அவற்றுள் ஹீப்ரு, கிரேக்கம், பாரசீகம், சிரியக்கு போன்ற மொழிகளும் அடங்கும்.

ஆரம்பக் கால அரபி மொழி

ஆரம்பக் காலத்தில் அரபி எழுத்துக்கள் ஒரே எழுத்துருவைக் கொண்டிருந்தாலும் தற்போது உள்ள எழுத்துகளைப் போல் "நுக்தா" புள்ளி அமைப்பிலான எழுத்துகள் இல்லை. உதாரணமாக ع= ஆயின், ع=க்ஹாயின், س=ஸீன், س=ஷீன் இன்னும் பல எழுத்துகள் ஒரே அமைப்பையும், அனால் வெவ்வேறு ஒலி அமைப்பைக் கொண்டுள்ளது. அவற்றை வேறுபடுத்துவது புள்ளிகள் தான். குரான் உலகிற்கே வழங்கப்பட்ட வேதமாக இருபதால் அரபி மொழியைக் கற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அரபி அரபியற்குத் தாய் மொழியாக இருந்ததால் எந்த விதமான சிரமமும் இன்றி பேசினார். அனால் அரபி அல்லாத பிற மொழிக்காரர்களுக்குக் கடினமாக இருந்ததால் குரான் ஓதுவதில் பிழை ஏற்பட வாய்ப்பு உள்ளதால் "நுக்தா" என்ற அடையாளப் புள்ளி அமைப்பு கொண்டுவரப்பட்டது {ع=ஆயின், غ=க்ஹயின், س=ஸீன், ش=ஷீன், ص=ஸாத், ض=லாத், د=தால், ذ=த்தால், ب=பா, ت=தா, ث=ஸா} அத்துடன் உயிர் மெய் அடையாளக்குறிகளும் கொண்டுவரப்பட்டது. உயிர் மெய் அடையாளங்கள் எந்த நாடில் உருவான குரானாக இருந்தாலும் அதில் கண்டிப்பாக உயிர் மெய் அடையாளம் இடப்படுகிறது, இதைத் தவிர்த்துக் குழந்தைகள் ஆரம்பக் கால கல்வி புத்தகங்களிலும் இடப்படுகிறது. மற்ற எதிலும் உயிர் மெய் அடையாளம் இடுவதில்லை.
அரபு மொழி ஒலிப்பு

அரபு மொழியில் உள்ள ظ என்ற எழுத்து தமிழில் ழ என்றுதான் பெயர்க்கப்படுகிறது. உதாரணம்:

    ظهر - ழுஹ்ர்
    ظلال - ழிலால் (பீ ழிலாலில் குர்ஆன் என்பதில் உள்ளது போல்).

அவ்வாறே ض என்ற எழுத்து ள என்று பெயர்க்கப்படுகிறது. உதாரணம்:

    حضرموت - ஹளரமௌத்
    مضر - முளர்.

தமிழில் உள்ள இந்த ழகரம் அரபு மொழியின் ظ ஒலிப்பிற்கும் ளகரம் அரபு மொழியின் ض ஒலிப்பிற்கும் நெருங்கி ஒலிக்கின்றன. மேலும், தமிழில் உள்ள இந்த ழகர, ளகர ஒலிகள் உருது போன்ற மொழிகளில் இல்லை. அதனாற்றான் உருது, இந்தி மற்றும் அவற்றுக்கு நெருங்கிய மொழிக்காரர்கள் ஆங்கிலத்தின் z போல மொழிகின்றனர். தமிழை ஆங்கிலத்துக்கு ஒலிபெயர்க்கும்போதும் இதே குழப்பம் வருகிறது. இந்த ழகரத்துக்குச் சிலர் z என்றும் zh என்றும் ஒலிப்புக் கொடுக்கின்றனர். அவ்வாறே L ஒலிப்பும் Tamil என்பதிற் போலப் பயன்படுத்தப்படுகிறது. ஆங்கிலத்தின் z எழுத்தைப் போல மொழியப் பழகிய பின்னர் இந்துசுத்தானி மொழிகளைச் சேர்ந்தோர் தங்களது மொழிகளுக்கு ஏற்றாற் போல அவற்றை ஜ எழுத்தின் ஓசையிலும் மொழிவதுண்டு. அத்துடன், அரபு மொழியை ஆங்கிலத்தில் ஒலிபெயர்க்கும்போதும் நாட்டுக்கு நாடு வேறுபாடு வருவதுண்டு. உதாரணம்:

    مسلم - முஸ்லிம் - Muslim, Moslem
    جمال - ஜமால் - Jamal, Gamal (எகிப்திய வழக்கு)
    ظاهر - ழாஹிர் - Lahir, Zhahir, Dhahir
    ذكر - திக்ர் - Zikr, Zekr, Dhikr
    حافض - ஹாபிள் - Hafil, Hafiz, Hafidh, Hafid.

இந்தச் சிக்கல்கள் காரணமாகவே, அரபு மொழியைச் சரிவரக் கல்லாதோர் அவற்றைத் தமிழிற் கூறும்போது பிழை ஏற்படுகிறது.
பேச்சு அரபு மொழி
பேச்சு அரபு     தமிழில்
அஸ்ஸலாமு அலைக்கும்     உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்
வ அலைக்கும் ஸலாம்     உங்களுக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்
இன்ஷா அல்லாஹ்     இறைவன் நாடினால்
அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம், பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்     விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டு இறைவன் இடம் பாதுகாவல் தேடுகிறேன், இறைவனின் திருப்பொருத்தத்தை கொண்டு ஆரம்பம் செய்கிறேன்
தவ்ஹீத்     ஏகத்துவம் (ஓரிறைக் கொள்கை)
லாயிலாஹா இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்     வணக்கத்திற்கு உரியவன் இறைவனைத் தவிர வேறு யாரும் இல்லை, முஹம்மது ரஸுலுல்லாஹ் (ஸல்) அவர்கள் இறைவனின் தூதரராவார்கள்
கேஃப் அல் ஹாலுக     நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? அல்லது உங்கள் நலன் எப்படியுள்ளது?
அன பீ ஹைரி     நான் நன்றாக இருக்கிறேன்.
மாஷா அல்லாஹ்     இறைவனை நாடியவாரே
கலாஸ்     முடிவடைந்துவிட்டது
நஅம்     ஆம்
லா     இல்லை
ஷுக்ரன்     நன்றி
யல்லா     தயாராகு / விரைவு செலுத்து
மாய்     தண்ணீர்
வாஹித்     ஒன்று
சுலோனிக்     எப்படி
ஹாம்ஸ்     நேற்று
அளிஎவ்ம்     இன்று
பாச்சர்     நாளை
அசீர்     பழரசம்
ஓய்னிக்     எங்கே
மௌஜூத்     இருக்கு
அன     நான்
அன்த     நீ
அன தலிபுன்     நான் மாணவன்
நஹ்னு ஹுநூது     நாங்கள் இந்தியர்கள்
அன ஹிந்தி     நான் இந்தியன்
ஹுவ வலது     அவன் சிறுவன்
ஹிய பிந்த்     அவள் சிறுமி
ஷம்ஸ்     சூரியன்
கமர்     சந்திரன்
நசாரா/மசீஹீயன     கிறிஸ்துவர்கள்
யஹுத்     யூதர்கள்
ஈத் மீளாத்     பிறந்த நாள்

About us|Jobs|Help|Disclaimer|Advertising services|Contact us|Sign in|Website map|Search|

GMT+8, 2015-9-11 20:13 , Processed in 0.161801 second(s), 16 queries .

57883.com service for you! X3.1

返回顶部